search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி இணைப்பு"

    வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வருகிற 26-ந்தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று 9 வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.#BankStrike

    சென்னை:

    பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதை கண்டித்து கடந்த 21-ந்தேதி வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடபட்டனர். இதனால் வங்கி சேவை, பண பரிமாற்றம் பாதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் 9 அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்களை கொண்ட சங்கங்கள் நாடு முழுவதும் வருகிற 26-ந்தேதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

    இப்போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். இதனால் வங்கி பணி பரிமாற்றம் மற்றும் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

    இதுபற்றி வங்க ஊழியர்களின் ஐக்கிய கூட்டமைப்பு கூறும்போது, “அனைத்து வங்கிகளையும் இணைத்து மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது. பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்தாலும் உலகில் முதல் 10 இடத்துக்குள் வர முடியாது.

    இதனால் வங்கிகளின் பல்வேறு கிளைகள் மூடப்பட்டு வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்று கூறி உள்ளது. #BankStrike

    3 வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் 26-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. #BankWorkersStrike

    சென்னை:

    தேனா வங்கி, பரோடா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைத்து ஒரு புதிய பெரிய வங்கியை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மத்திய அரசின் வங்கி இணைப்பு கொள்கையை எதிர்த்து வருகிற 26-ந்தேதி ஒரு நாள் அடையாள எதிர்ப்பு வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:-

    வங்கிகள் இணைப்பு முடிவு தேவையற்றது. ஏழை-எளிய மக்களுக்கு சேவை செய்ய பெரிய வங்கிகள் தேவையில்லை. உலகளவில் செயல்பட்ட பெரிய வங்கிகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. சாதாரண ஏழை மக்களின் சேமிப்பு வைப்புகளை பெற்றுக் கொண்டு செயல்படும் இந்திய வங்கிகள் மேலை நாட்டு பெரிய வங்கிகள் போல சிக்கி கொள்ளக் கூடாது.

    சாதாரண சேமிப்பை வைத்து ஏழை மக்களுக்கு விவசாயத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கடன் வழங்கும் திறமையான வங்கிகளை தொடங்குவது தான் அவசியம்.

    வங்கிகள் இணைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான கிளைகளை மூடும் நிலை உள்ளது. ஒரு புறம் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘‘ஜந்தன் யோஜனா’’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து விட்டு மறுபுறம் வங்கி இணைப்பு என்ற பெயரில் கிளைகளை மூடும் திட்டத்தை அறிவிப்பது ஏற்புடையது அல்ல. மேலும் வங்கிகள் போன்ற பொதுத்துறை மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மூடும் நடவடிக்கையால் வேலை வாய்ப்பு குறையும். எனவே இந்த முடிவு பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் உகந்தது அல்ல.

    வங்கிகளை விரிவுபடுத்தும் அவசியம் இருக்கின்ற போது அவற்றை இணைப்பது தவறான கொள்கை. அதுமட்டுமின்றி பெரும் முதலாளிகள் திருப்பி செலுத்தாத வாராக்கடன்களை வசூலிப்பதே வங்கிகளின் தலையாய கடமையாகும்.

    அதனை விடுத்து வங்கி இணைப்பு கொள்கையில் ஆர்வம் காட்டுவது அடிப்படை பிரச்சினையில் இருந்து விலகி நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதாக அமைந்துள்ளது.

    எனவே வங்கி இணைப்பு கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி 26-ந்தேதி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதன் காரணமாக வங்கி பணிகள் முழுமையாக பாதிக்கப்படும். வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என 10 லட்சம் பேர் இதில் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #BankWorkersStrike

    ×